Sunday, November 8, 2015

செந்தமிழா ----- சுபஸ்ரீ

செந்தமிழா ****************** செம்மை வாழ்வை எண்ணி செம்மரம் சாய்த்தனயோ? செந் நீரை சிந்தியே நீ செந்தமிழா மாண்டனையே ! செருக்குற்றோர் உனை கொன்றார்.. செங்கோட்டை கேட்டிடுமோ? சென்னை கோட்டையுந்தான் கேட்டிடுமோ? செங்கோலும் இங்கு இல்லை செயல் புரிவார் யாரும் இல்லை! செம்மொழியாள் தமிழ் தாயின் செம்மாந்த நிலை மாறி செல்கின்ற இடமெங்கும் செங்களமாய் ஆவது ஏன்? செந்தழலாய் எரியுதடா செத்த உன் சேதி கேட்டு! செல்லாமை வாட்டியதே! செல்லிடமும் கொல்கிறதே! 



 சுபஸ்ரீ 
(செல்லாமை - வறுமை )

No comments:

Post a Comment